நகை வாங்க கிளம்பியாச்சா.. ஒரே நாளில் 2 முறை சரிந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (செப்டம்பர் 28) காலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1880 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.800 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 235 குறைந்து ரூ.13,765 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120 க்கு விற்பனையானது.

இதைத்தொடர்ந்து, மாலையில் ஒரு சவரன் தங்கம் மேலும் ரூ. 800 குறைந்து, ரூ.1,09,320-க்கும் ஒரு கிராம் ரூ.13,665-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்ததால், ஒரு சவரன் ரூ.2,680 வரை சரிந்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.235 குறைந்து ரூ.11,535 க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.1,880 குறைந்து ரூ.92,280 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து மாலையில் ஒரு சவரன் தங்கம் மேலும் ரூ. 800 குறைந்து, ரூ.91,480-க்கும் ஒரு கிராம் ரூ.11,435-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்து ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

27-9-20261,12,000
26-9-20261,12,000
25-9-20261,12,080
24-9-20261,12,000
23-9-20261,13,080
22-9-20261,13,480
21-9-20261,14,160
20-9-20261,14,280
19-9-20261,14,280
18-9-20261,13,240

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

27-9-2026250
26-9-2026250
25-9-2026250
24-9-2026250
23-9-2026255
22-9-2026255
21-9-2026260
20-9-2026260
19-9-2026260
18-9-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share