ஜெம் வீரமணி மீது மீண்டும் ஒரு வழக்கு : எஸ்.ஐ.டி அதிரடி!

Published On:

| By Kavi

தொழிலதிபரான ஜெம் கிரானட்ஸ் தலைவர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஜெம் வீரமணி விவகாரத்தில் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.டி குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில், ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளுக்கு எதிரான வழக்கு மற்றும் அது தொடர்பாக பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள Special Investigation Team – SIT அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று, (28.09.2026) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேற்படி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share