‘ஸ்டிரைக்’ ஒத்திவைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 75 பேர் சங்கத்தில் இருந்து கூண்டோடு ராஜினாமா!

Published On:

| By Mathi

PNB-Bank Strike

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியைச் சேர்ந்த 75 அதிகாரிகள் தங்களது சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (AIPNBOA) தலைமைக்கு நேற்று (செப்டம்பர் 28) அனுப்பப்பட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கி ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகளை சங்கம் கையாளும் விதத்தில் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களை தொடர்ந்து ஒத்திவைப்பதன் மூலம் வங்கி ஊழியர்களின் பேரம் பேசும் வலிமையை மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய முக்கியமான பிரச்சினைகளில் தொடர்ந்து சமரசம் செய்வதும், உறுதியான நடவடிக்கை எடுக்காததும் தற்போதைய சங்கத் தலைமை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது.

ADVERTISEMENT

இதனால் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறோம். இனி எங்களது சம்பளத்தில் இருந்து சங்கத்துக்கான சந்தாவைப் பிடித்தம் செய்வதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியன் வங்கியைச் சேர்ந்த 17 அதிகாரிகள் அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்திலிருந்து (AIIBOA) கூட்டாக ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share