கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் அங்கு பணிபுரியும் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் 4 ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் இதுதொடர்பாக இதுவரை யாரும் எழுத்து பூர்வ புகார் தரவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா