ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கு: கெனிஷா ஆஜராக உத்தரவு!

By Kavi

|

Published on 26 Nov 2026, 8:49 PM

kenisha francis reply to aarthi ravi in instagram

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கில் பாடகி கெனிஷா ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் விவாகரத்து கேட்டு ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாடகி கெனிஷாவுடன் இருக்கும் நட்புதான் ரவி மோகன் தனது மனைவியை பிரிய காரணம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

ADVERTISEMENT

அதேசமயம் கெனிஷாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், அவ்வாறு அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் பொதுவெளியில் கருத்துக்களை பகிரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

ஆனால் இந்த உத்தரவை மதிக்கவில்லை என்று ரவி மோகனுக்கு எதிராக ஆர்த்தி மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவி மோகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பொது மன்னிப்பு கேட்டு அறிவிப்பு வெளியிட்டார் ரவி மோகன்.

இதற்கிடையே கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி தொடர்ந்த வழக்கை, சாட்சிகள் பதிவுக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 3ஆம் தேதி கெனிஷா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அன்றைய தினமே வடக்கு விசாரித்து முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel