டிஜிட்டல் திண்ணை: திமுக- பாமக கூட்டணி! ஸ்டாலின்- அன்புமணி பேச்சு- திடீர் திருப்பம்!

Published On:

| By Mathi

DMK PMK Alliance

வைஃபை ஆன் செய்ததும், ”வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு, படையெடு படையப்பா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இடைத் தேர்தல் நேரத்துல இப்பவேவா?

ப்ரோ.. இடைத் தேர்தல் செய்தியோடுதான் வந்திருக்கிறேன்.. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், “யாருக்கும் ஆதரவு இல்லை”ன்னு பாமக அறிவிச்சதை பத்தி நேத்து விரிவாகவே பேசியிருந்தோம் இல்லையா? இதுலதான் பெரிய அப்டேட் வந்துருக்குங்க ப்ரோ..

ADVERTISEMENT

அப்படியா.. சொல்லுங்க ப்ரோ..

2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லைன்னு எடப்பாடி சொல்லி இருந்தாரு.. அதிமுக கூட்டணியில பாமகவை சேர்க்கிறதுக்கு பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தாங்க.. ஆனா எடப்பாடி மீது அப்ப அன்புமணி ரொம்பவே அதிருப்தியில இருந்தார். அந்த டைமில் பாஜகவின் அண்ணாமலை போன்றவர்களும் டெல்லி மேலிடமும் அன்புமணிகிட்ட பேச, பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுச்சு.. அன்புமணியோட இந்த மூவ்களுக்கு திமுக தரப்பில பேசியிருந்த சபரீசனும் ஒரு காரணம்னு சொல்லப்பட்டது.

சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில பாமக இடம் பெற்றுச்சு. வட தமிழ்நாட்டுல அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைச்சதுல பாமகவுக்கு ஆதரவும் ஒரு காரணம் அப்படிங்கிறதை அதிமுகவினரே ஏத்துக்கிறாங்க..

ADVERTISEMENT

இப்ப மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமகவோட ஆதரவை திமுக, தவெக ரகசியமாக கேட்டிருந்தாங்க.. கூட்டணி கட்சிங்கிறதால அதிமுக வெளிப்படையாகவே ஆதரவு கேட்டது.. இதுல தவெகவைப் பொறுத்தவரைக்கும், “விசிக இருக்கிறதால எங்க கூட்டணிக்குள் வர்றதுல உங்களுக்கு சங்கடங்கள் இருக்கலாம்.. போன தேர்தலில் மதுராந்தகத்துல திமுக 3-வது இடம்தான் வாங்குச்சு.. இப்ப நீங்க அதிமுகவுக்கு ஆதரவு தராம இருந்தா நல்லா இருக்கும்.. போகப் போக நாம பார்த்துக்கலாம்”ன்னு அன்புமணிகிட்ட பேசுனாங்க..

இப்படி எல்லா கட்சிகளும் பாமகவிடம் பேசிய நிலையில், கடந்த 2010-க்குப் பிறகு பொதுவாக இடைத் தேர்தல்களைப் புறக்கணிக்கிறது அப்படிங்கிற நிலைப்பாட்டை பாலோ அப் செஞ்சபடியே, இப்ப நடக்கிற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையும் பாமக புறக்கணிச்சுட்டு யாருக்கும் ஆதரவு இல்லைன்னு அன்புமணி அறிவிச்சார்..

ADVERTISEMENT

அன்புமணியோட இந்த அறிவிப்பால அதிமுக ரொம்பவே அதிர்ச்சியாகிடுச்சு.. தவெக தரப்புல ஹேப்பியாகிட்டாங்க..

ஆனா திமுகவைப் பொறுத்தவரைக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் ரொம்ப சவாலானது. ஏன்னா கூட்டணியில தேமுதிக, மநீம, கொமதேக மட்டும்தான் இருக்குது.. அதோட விசிக தலைவர் திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக திமுகவை ரொம்பவே கடுமையாக விமர்சிச்சுகிட்டு இருக்கிறார்.. இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவை எடுக்கிறேன்னு சொல்ற திருமாவளவன், அவங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் திமுகவை ரொம்பவே தாக்கி பேசுகிட்டு இருக்கிறது ஸ்டாலினை ரொம்பவே பாதிச்சிருச்சு.. அதனால பாமகவுடன் கூட்டணி அமைச்சா என்னா?ன்னு ஸ்டாலின் முடிவு எடுத்தார்.

பொதுவாக திமுக தரப்புல இருந்து பாமக தலைவர் அன்புமணிகிட்ட துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போன்ற சீனியர்கள் பேசுவாங்க.. ஆனா இந்த முறை ஸ்டாலினே களமிறங்கிட்டாருன்னு சொல்றாங்க ப்ரோ..

இதை பத்தி பாமக தரப்பில் விசாரிச்சப்ப, “யாருக்கும் ஆதரவு இல்லைன்னு அறிவிச்ச பிறகு அன்புமணிகிட்ட ஸ்டாலின் பேசுனார். அப்ப, “சட்டசபை தேர்தலில் பாமகவை கூட்டணியில சேர்க்க விசிகதான் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சது.. ஜாதிய கட்சி, மதவாத கட்சியில இருக்கிற கூட்டணியில இருக்கமாட்டோம்னு விசிக சொன்னது.. அதனால சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில பாமக இடம் பெற முடியாம போயிருச்சு.. இப்ப தவெக கூட்டணிக்கு விசிக போயிருச்சு.. அதனால திமுகவுடன் இணைந்து கூட்டணியாக பாமக பயணத்தை தொடரலாமே”ன்னு அன்புமணிகிட்ட ஸ்டாலின் அழுத்தமாக சொன்னார்..

ஸ்டாலினின் பேசுனதுல அன்புமணியும் கன்வீன்ஸ் ஆகிட்டார்.. அதனால இந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை பாமக ஆதரிக்கும்னு ஸ்டாலின்கிட்ட அன்புமணியும் உறுதியா சொல்லிட்டார்”ன்னு சொன்னாங்க ப்ரோ..

ஏற்கனவே பாமக யாருக்கும் ஆதரவு இல்லைன்னு அறிவிச்சுருக்கு.. அதனால அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிட்டு இப்ப திமுகவுக்கு ஆதரவுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறதா? ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு அப்படியே இருக்க, கிரவுண்ட்ல திமுக வேட்பாளருக்கு ஓட்டு போடனும்னு பாமகவினருக்கு சொன்னால் போதுமா?ன்னு அன்புமணி தரப்பில சீரியஸ் டிஸ்கஷன் நடந்துகிட்டு இருக்குதாம் ப்ரோ.. இன்னொரு பக்கம், திமுகவை பாமக ஆதரிக்கிறதை பாஜகவும் ரொம்ப ‘நெருக்கமாக’ கவனிச்சுகிட்டு இருக்கு.. இந்த இடைத்தேர்தல் மூவ்ஸ்தான் அடுத்து வர்ற உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்த ட்விஸ்ட்டாக இருக்கும்ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share