தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் : களத்தில் 58 பேர்!

Published On:

| By Kavi

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று பரிசீலினை நடந்தது. இன்று வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்.

ADVERTISEMENT

இந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்திஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களம் காண்கின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 30 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share