தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்காக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 முனை போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் 40 பேர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் முதல்வர் விஜய் தொடங்கி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தலைவர்கள் அனைவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
அதன்படி, முதல்வர் விஜய், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட 40 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், விஸ்வநாதன், லோகேஷ் தமிழ்ச்செல்வன், வன்னி அரசு, மரிய வில்சன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
