மலச்சிக்கல், இது நம்மில் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு பிரச்சினை. இது சிலருக்கு தினம் தினம் பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது.
இதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்லும் எளிய தீர்வுகள் இதோ…
“ஆயுர்வேத மருத்துவத்தின்படி பல நோய்களுக்கு மூலகாரணமே மலச்சிக்கல்தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியாக வெளியேறினால் மனம் அமைதியாக இருக்கும். மலம் சீராக வெளியேறவில்லை என்றால் உடல்நலம் பாதிப்பதுடன் மனமும் பாதிக்கப்படும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமென்றால் பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், தானியங்கள், உலர் பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். துரித உணவுகள், அதிகப்படியான உணவு, இறைச்சியின் அதிகப்படியான நுகர்வு ஆகியவற்றை கவனமாக தவிர்க்க வேண்டும். தேநீர் அல்லது காபியின் அதிகப்படியான பயன்பாடும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உணவை ஒழுங்காக மென்று சாப்பிட வேண்டும்.
ஆயுர்வேத சிகிச்சையின்படி உணவு உட்கொண்ட ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து உட்கொள்ள வேண்டும். இதைத் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்வதால் நாளடைவில் மலச்சிக்கல் என்பதே இருக்காது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒருவேள வெளிநாடுனு நெனச்சிட்டாரோ : அப்டேட் குமாரு
ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!
வினேஷ் போகத் தகுதிநீக்கம்… தீர்ப்பு ஒத்திவைப்பு!
டிஜிட்டல் திண்ணை: மீண்டும் ஓபிஎஸ்? வேலுமணி நடத்தும் அவசர ஆபரேஷன்!