ஒருவேள வெளிநாடுனு நெனச்சிட்டாரோ : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு மோடி வயநாடு போனதுல இருந்து அவர் கெளம்புனது வரைக்கும் அவர் ஹெலிகாப்டர்ல பறக்குறாரு, தரைல நடக்குறாருனு நியூஸ் மேல நியூஸ் அடுத்தடுத்து வந்துட்டே இருந்துச்சி..

அதெல்லாம் சரி… வயநாடு நிலச்சரிவ தேசிய பேரிடரா அறிவிச்சாரா? கேரளாவுக்கு ஏதும் நல்ல செய்தி இருக்கானு நம்ம டீக்கட நண்பர்ட கேட்டேன்.

அதுக்கு அவர், ”அதெல்லாம் இல்ல.. அவரே வெளிநாடுனு நெனச்சி கெளம்பி, அப்புறம் அது கேரளாவுல இருக்குனு சொன்னதும் அப்செட் ஆயிருப்பாரு.. இதுல நல்ல செய்தி எங்குட்டு”னு அசால்டா சொல்லிட்டு கெளம்பிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

Kirachand

வயநாடு-நிதிப் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வோம்! – பிரதமர் மோடி

தமிழ்நாட மட்டும் கண்டுக்கிட மாட்டீங்கிறீங்களேண்ணே! ~ தமிழக மக்கள்

Jeni

சட்டுனு கிடைக்கிற ஒரு காபி டீ தர மேஜிக் வேறு எதுலயுமே கிடைக்கிறது இல்ல…‌

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பழசு எதையும் நான் மனசுல வைச்சுக்க மாட்டேன் மாமா.. உடனுக்குடன் மறந்துருவேன்..

நல்ல பழக்கம் மாப்ள.. நமக்கு வர்ற தோல்வி ஏமாற்றம் எல்லாத்துயும் அப்படித்தான் மறக்க பழகிக்கனும்..

தோல்வி ஏமாற்றமா..? என் பாஸ்வேர்டு, ஆபிஸ்ல எனக்கு தர்ற வேலை இதெல்லாம் மறந்துருதுன்னு சொல்றேன் மாமா..

balebalu

விடுமுறை நாள் என்றால்
முன்பு டிவியில்
சிறப்பு திரைப்படம்

இப்போ
GST சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் என்ற நியூஸ்

balu

“மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ” ன்னு சொல்லுறாங்களே அப்படின்னா என்ன அண்ணே ?

அடேய் ஒரே நேரத்துல ஒரே படத்தை
தியேட்டர் லயும் பார்த்துட்டு
OTT லையும் பார்த்துட்டு
கிழி கிழி ன்னு கிழிக்குறாங்களே
அதுக்கு பேருதான் மத்தளத்துக்கு இடி

▶படிக்காதவன்™✍
இன்னைக்கு காலத்தில் ஒருத்தருக்கு மரியாதை கொடுக்குறதுங்கிறது ஒருத்தர் வந்து பேசும்போது ஃபோனை எடுக்காமல் இருப்பதே…

✒️Writer SJB✒️

நாம நல்லா இருக்கணும்னு ஒன்னு ரெண்டு சொந்தக்காரங்க தான் நினைப்பாங்க

இவன் மட்டும் எப்படி நல்லா இருக்கான்னு தான் நிறைய சொந்தக்காரங்க நினைப்பாங்க..!

லாக் ஆஃப்

ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!

வினேஷ் போகத் தகுதிநீக்கம்… தீர்ப்பு ஒத்திவைப்பு!

+1
2
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0