கோவை போத்தனூரில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணூர், மதுரைக்கு செல்லக் கூடிய ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Changes in 4 Train Services in Coimbatore
- கண்ணூர்- கோவை எக்ஸ்பிரஸ் (16607) காலை 6 மணிக்கு கண்ணூரில் இருந்து பாலக்காடு வரை மட்டும் இயக்கப்படும்; பாலக்காடு- கோவை இடையேயான ரயில் சேவை ரத்து.
- மதுரை- கோவை எக்ஸ்பிரஸ் (16722) காலை 7.05க்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்; பொள்ளாச்சி- கோவை இடையேயான ரயில் சேவை ரத்து.
- கோவை- கண்ணூர் எக்ஸ்பிரஸ் (16608) பிற்பகல் 1.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 3.10 மணிக்கு புறப்படும்; கோவை- பாலக்காடு ரயில் சேவை ரத்து.
- கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் (16721) பகல் 2 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக பொள்ளாச்சியில் இருந்து 3.30மணிக்கு புறப்படும்; கோவை- பொள்ளாச்சி இடையேயான ரயில் சேவை ரத்து.
