செத்த பிறகும் சில்க்கை விடாத ’அந்த சிலர்’ – அதிர வைத்த சினிமா பத்திரிகையாளர்

Published On:

| By Kumaresan M

நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட பிறகும் கூட ஒரு சிலர் மார்ச்சுவரியில் அவரின் உடலை பார்த்து சென்றதாக சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகை சில்க் ஸ்மிதா இறப்புக்கு பிறகு நடந்த சம்பவங்களை பிஹைன்ட் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலிடத்தில் பகர்ந்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘ தற்கொலை தகவல் கிடைத்ததும், உடனே நான் அவரின் வீட்டுக்கு ஓடினேன். சேலையில்தான் தூக்கு மாட்டியிருந்தார். வழக்கமாக தூக்கு மாட்டினால் நாக்கு வெளியே தள்ளி விடும். ஆனால், ஸ்மிதாவுக்கு அப்படி ஆகவில்லை. மாறாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை போலவே அழகாக இருந்தார். நான் அதை தற்கொலையாக பார்க்கவில்லை. கொலை என்றுதான் நான் நினைத்தேன். பணம் அங்கு விளையாடும் போதும் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கூறியுள்ளார். when silk smitha body in mortuary

சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவாரியில் சில்க் ஸ்மிதாவின், உடல் அலங்கோலமாக வைக்கப்பட்டிருந்ததாக புலியூர் சரோஜா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு சபிதா ஆனந்த் பதில் கூறுகையில், ‘ அங்கே அவரின் உடலில் துணியில்லாமல் இருந்தது. தகவல் கிடைத்ததும் மார்ச்சுவரிக்கு புலியூர் சரோஜாவும் எஸ்.பி முத்துராமனும் சென்றனர்.

அப்போது, உடலில் துணியில்லாமல் இருந்ததை பார்த்ததும், ‘எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்பா இப்படி போட்டு வச்சுருக்கீங்களே? ‘ என்று எஸ்.பி முத்துராமன் ஆதங்கப்பட்டார். அப்போது, ஒரு சிலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது போல அவரின் உடலை சென்று பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன்’ என்று தெரிவித்தார். when silk smitha body in mortuary

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சில்க் ஸ்மிதாவை 1979 ஆம் ஆண்டு நடிகர் வினு சக்கரவர்த்தி கதை எழுதிய வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் சில்க் என்ற பெயரில் அவர் நடித்தார். இதனால், அவரின் பெயருக்கு முன்னர் சில்க் என்பது ஒட்டிக் கொண்டது. பின்னர் , தமிழ் திரையுலகில் அவர் கோலோச்சியது வரலாறு.

தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில் மன உளைச்சல் காரணமாக சில்க் ஸ்மிதா தனது 36வது வயதில் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். டாக்டர் ஒருவரை காதலித்து அவர் ஏமாற்றியதால் சில்க் ஸ்மிதா உயிரை மாய்த்தார் என்றும் சொல்கிறார்கள். எனினும், அவரின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share