அடுத்து ஐபிஎல் தான்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

மார்ச் 8 இளையராஜா சிம்பொனி, மார்ச் 9 இந்தியா – நியூசிலாந்து பைனல்னு வீக் எண்ட் ஏதோ பெரிய கொண்டாட்டம் மாதிரி போயிடுச்சி…

அதே மாதிரி நெனப்புல இன்னைக்கு காலையில எந்திரிச்சா… திங்கள் கிழமை… வேலைக்கு போகனும்… சரினு கெளம்பி வெளிய வந்தா… வெயிலு வெளுத்து வாங்குது… இப்படி ஆரம்பமே அமர்களமா இருந்தது.

ஒரு வழியா வேலை முடிச்சி ஈவினிங் டீக்கடைக்கு வந்தா… டீக்கடக்காரர் கடைய பூட்டிட்டு ஊருக்கு போயிட்டாராம்… இந்த ஐபிஎல்ல கொஞ்சம் சீக்கிரமா ஆரம்பிக்க சொல்லுங்க…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls update kumaru

ச ப் பா ணி

மாத துவக்கத்தில் ஆணவம் கூடாது;
மந்த் எண்டில் விரக்தி கூடாது!

மயக்குநன்

அதிமுக சேர்ந்து விடுமோ என்று திமுகவினருக்கு அச்சம்!- ராஜேந்திர பாலாஜி.
நடக்கிறதை எல்லாம் பார்த்தா… அதிமுக ‘சோர்ந்து’ விடுமோனு அதிமுகவினருக்குதான் அச்சம் பாஸ்..!

mohanram.ko

பழசை மறக்கக்கூடாது…
என் மனைவி, 10 வருஷம் முன்னாடி நடந்ததையே மறக்காம சொல்லி காட்டுவாங்கடா

கடைநிலை ஊழியன்

symphony னா.. அப்படி ஒரு symphony.. கேட்டுகிட்டே இருக்கனும் போல இருந்துச்சு..
எங்க.. இதுக்கு முன்னாடி எத்தன symphony கேட்டுருக்க னு சொல்லு பாப்போம்..

ச ப் பா ணி

சிம்பொனி இசையமைச்ச ராஜாவே திரும்பி வந்துட்டார்
இன்னும் சிம்பொனி என்றால் என்ன பதிவு மட்டும் ஓயாம வந்துட்டே இருக்குங்க

மயக்குநன்

விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது!- ஜெயக்குமார்.
ஏன்… அந்த தொப்பி இபிஎஸ்கிட்ட மட்டும்தான் இருக்கோ..?!

iQKUBAL

வாழ்க்கை முடியிறதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிக்கனும்னு நெனைப்ப..
ஆனா எதையுமே அனுபவிக்க முடியாதுன்னு புரியும் போது வாழ்க்கை முடிஞ்சிருக்கும்..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share