நீட் : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!

Published On:

| By Mathi

Neet DMK Protest Delhi

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்பாக திமுக எம்.பி.க்கள் இன்று ஜூலை 23-ந் தேதி போராட்டம் நடத்தினர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இப்போராட்டத்தில், ​நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்கள் எதிர்கால நல்வாழ்விற்காக அறவழியில் போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share