நீட் தேர்வுகளுக்கு எதிராகவும் (Anti-NEET) மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் நாளை ஜூலை 24-ந் தேதி நாடு தழுவிய அமைதி போராட்டத்துக்கு காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்துள்ளது.
நீட் எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்தித் தொகுப்பு:
- ஜூலை 24-ந் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது
- பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் மாலை 6.30 மணிக்குள் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் நடைபெற்றன.
- ”காக்ரோச் ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த 4 முறை முயன்றோம்; பேச்சுவார்த்தையை எங்கு நடத்த வேண்டும் என அவர்களே முடிவு செய்யட்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
- டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த மோதலில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.
- டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்; இந்த தடையை நீக்காவிட்டால் தலையிடுவோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, தமக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாலையில் போராட்ட களத்துக்கு வருவதாக கூறியுள்ளார்.
- டெல்லி ஜந்தர் மந்தர் மாணவர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகிறது; பிற பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளுடன் மாணவர்களின் போராட்டத்தை இணைத்து கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடாது என்று சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பெயர் பேட்ஜ் மற்றும் சீருடை அணியாத காவல்துறையினரை பயன்படுத்தி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏற்க முடியாது என
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் விமர்சித்துள்ளார். - மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மவுன ‘ஆதரவு’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் மவுனம் காப்பதற்கு முதுபெரும் நடிகர் நசிருதீன் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ”மாணவர்கள் மீது அக்கறை இருப்பதாக சொல்லும் மத்திய அரசு, தடியடி- கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியது ஏன்?” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
- டெல்லியில் ஜூலை 20-ந் தேதி காக்ரோச் ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியில் தேசவிரோத சக்திகள் ஊடுருவியது தொடர்பாக விசாரணை நடத்த கோரும் பொதுநலன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய மற்றும் நீதிபதி தேஜாஸ் கரியா அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
- டெல்லி போராட்டங்களுக்கு ஆதரவாகவும், “அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடனும் உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (Preamble) கூட்டாக வாசித்தனர்.
