ஏஐ பாதுகாப்புதான் முதலில்! பணியாளர் தேர்வில் குணமும் முக்கியம் என்று முதலீட்டாளர்களிடம் அழுத்திய Anthropic CEO டாரியோ அமோடி

By Minnambalam Desk

|

Published on 15 Nov 2026, 8:00 PM

செயற்கை நுண்ணறிவுத் துறையில் போட்டி நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் நிலையில், பாதுகாப்பு, பணியாளர் கலாச்சாரம் ஆகியவற்றை முன்வைத்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei). பங்குச்சந்தையில் நுழையத் தயாராகிவரும் இந்த நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியோடு தன் பணிச்சூழலையும் முதலீட்டாளர்களிடம் முக்கியமாக எடுத்துச் சொல்லியுள்ளது.

ஏஐ பாதுகாப்பில் எச்சரிக்கை

ADVERTISEMENT

நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், JPMorgan Chase தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டைமனோடு பேசிய அமோடி, ஏஐ பாதுகாப்பு விஷயத்தில் தங்கள் நிறுவனம் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவதாகச் சொன்னார்.

ChatGPT-யை உருவாக்கிய OpenAI-யிலிருந்து மாறுபட்டு, வணிக நிறுவனங்களுக்கான ஏஐ சேவைகள், மென்பொருள் உருவாக்கக் கருவிகள் ஆகியவற்றுக்கு Anthropic அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

ADVERTISEMENT

ஆளைத் தேர்வு செய்வதில் கடும் விதி

நிறுவன வெற்றிக்குத் தொழில்நுட்பத் திறமை மட்டும் போதாது என்பது அமோடியின் கருத்து. பணியாளர்களின் குணமும், குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் திறனும் முக்கியம் என்கிறார். அதனால் ஒவ்வொரு புதிய ஆள்சேர்ப்பிலும், கலாச்சாரப் பொருத்தத்தைப் பார்க்கத் தனி நேர்காணல் நடத்தப்படுகிறது. தொழில்நுட்பத்தில் எவ்வளவு திறமை இருந்தாலும், மற்றவர்களை மதிக்காதவர்கள், எல்லாப் புகழும் தனக்கே வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆகியோருக்கு நிறுவனத்தில் இடமில்லை என்பது அவரது அணுகுமுறை என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

வேலை நேரத்தில் பாதி இதற்காகவா?

தன் பணிநேரத்தில் சுமார் 40 முதல் 50 சதவீதத்தை, ஆள்சேர்ப்பிலும் நிறுவனக் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் செலவிடுவதாக அமோடி தெரிவித்துள்ளார்.

IPO பற்றிய தகவல்கள்

Anthropic தன் பங்குகளுக்கு 70 முதல் 78 டாலர் வரை விலை நிர்ணயித்துள்ளது. அதிகபட்ச விலையில் பங்குகளை வெளியிட்டால் சுமார் 64.4 பில்லியன் டாலர் நிதி திரட்ட முடியும். நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.4 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-ல் OpenAI-யிலிருந்து வெளியேறிய அமோடி, Anthropic-ஐ இணைந்து தொடங்கினார். வரும் காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஏஐ மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel