தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, ரூ.1.42 கோடி பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் மதுவிலக்கு, மின்வாரியத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவரது பதவி காலத்தில் டாஸ்மாக்கில் முறைகேடுகள் நடந்ததாக கூறி செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனைகளை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கில் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் செந்தில் பாலாஜி ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக ஒருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதனால் மின்சார வாரிய பணி மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியையும் போலீசார் விசாரணைக்கு அழைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
