தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டதன் பின்னணியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை பாடினான். உரைநடையை சந்தத்தை வைத்து பாடிவிட்டான், அன்னையிலிருந்து தமிழ் வேற வடிவத்துக்கு திரும்பிட்டது. என்னைக்கு நீ நான் தமிழன், என் தாய்மொழி தமிழ் என்ற திமிரைக் கொள்கிறியோ, அன்றைக்கு இந்த இனம் எழும்புடா, விடுதலை அடையும்.”
உன் உள்ளத்தில் எழுதிய ஆங்கிலம் ஒரு மொழி, அது அறிவல்ல. அடுத்தவன் மொழி எனக்கு எப்படிடா அறிவாகும்? ‘பிளடி நான்சென்ஸ்’ என்று என்னைக்கு நீ நினைக்கிறியோ, அன்னைக்கு சரியாயிடும்.
இந்த நாட்டுல எல்லா மொழியும் படிப்போம், நாங்கள் வாழ எங்கள் மொழி தமிழ் படிப்போம், எங்கள் இனம் வாழ… மொழி என் முகம், என் முகவரி, என் கலை, என் இலக்கியம், என் அடையாளம், என் வரலாறு, என் அரசியல், என் உயிரடா என்று என்னைக்கு நீ நினைக்கிறியோ அன்னைக்கு வருமடா உனக்கு உணர்வு, மானம், வீரம், ரோசம் எல்லாம் வரும்டா! நீ தமிழ் என்று உச்சரிக்காதவன், தமிழன் என்று உச்சரிக்காதவன்ட்ட நாட்டை கொடுத்துட்டு எங்களை நடுரோட்டுல போட்டு நிறுத்திட்டீங்கடா பைத்தியக்காரப் பயல்களா! நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டமே! தலைவன் எவன்?
எங்களுக்கெல்லாம் ஒரு பெருமிதமும் திமிரும் இருக்குடா! என்னடா எங்கள சொல்ல முடியும்? புறம் பேசுவ, அவதூறு பேசுவ, பொய்யை பரப்புவ, கட்டமைப்பைப் பேசி என்ன பேசுவ நீ? ‘திரள்நிதி திருடர்கள்’… இவ்வளவு நாள் சொல்லிட்டு இருந்தவன் யாரு? திருட்டு நிதிக்காரன்.
இப்ப சொல்றா அயோக்கியப் பயலுங்க, பிளாக் டிக்கெட் காரன், கள்ளச்சந்தையில் திரைப்படம் பார்க்கிற அனுமதி சீட்டை விற்ற அயோக்கியப் பையன் எங்களை திரள்நிதி திருடன் என்கிறான்.
ஆட்டம் மாறி மாறிதான் ஆடுவோம். இந்த ஆட்டம் உங்க கையில இருக்கு, உங்க கால்ல இருக்கிற பந்து ஒரு நாள் எங்கள் கால்களுக்கு வரும், பார்த்து ஆடணும்! பார்த்து பேசணும்! ‘வாதத்தில் தோற்பவன் அவதூறை கையில் எடுப்பான்’ என்கிறான் சாக்ரடீஸ்.
தம்பி கொலை வெறியில இருக்கோம்.. என் தலைவன் பிரபாகரன் என்பது பெயர் சொல்லல்ல, அவனே ஒரு பேரினத்தின் வரலாறு. அவன் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற தத்துவமாகவே வாழ்ந்தவன்; கற்பித்தவன் அல்ல, வாழ்ந்தவன்
மண்டியிட்டு வாழ்வதை விட மானத்தோடு மடிவது மேலானது; சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டுச் சாவது மேலானது – இதான்டா மானத் தமிழனின் கோட்பாடு.
நமக்கு ஒரு கனவு இருக்கிறது, நம் தலைவர் நமக்கு கையளித்த பெரும் கனவு இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் தூக்கிச் சுமந்த கனவு, நம் தலைவனும் பல்லாயிரக்கணக்கான நமது மாவீரர்களும் சுமந்த கனவு இன்று நமது கைகளில்! காலம் வேறு, காலம் வேறு, கனவு ஒன்றுதான்! தம்பி வெற்றிச் செல்வன் சொன்னது போல நான் முன்வைத்ததுதான் இலக்கு; ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை.
பாதையைத் தேடாதே, உருவாக்கு என்றான் தலைவன்! ஹிட்லர் சொல்றான், ‘அங்க என்னடா பாத்துட்டு இருக்க பாதையவா? பாதை இறங்கி நட, அது பாதையாகும்’ இறங்கி நடந்தான் தலைவன், பாதையாச்சு! நமக்குச் சொன்னான், பாதையைத் தேடாதே உருவாக்கு! நடந்தோம், உருவாகிவிட்டது, இலக்கை குறித்தாகிவிட்டது! பாதை சரியானது, பயணம் தெளிவானது, உழைப்பு கடுமையானது, உண்மையானது, வெற்றி உறுதியானது.
மானத்திற்காக போராட வந்த பிள்ளைகள் நாங்கள், ஆனால் தன்மானத்தை இழந்துவிட்டு போராட மாட்டோம்! தேர்தலில் தோற்றுவிட்டு போறோம், யாரிடம் தோற்கிறோம்? தோல்வி இனங்களுக்கானது அல்ல!
”சாதி பார்த்து போடாதே ஓட்டு; அது எனக்கு தீட்டு”ன்னு பேசுனது நாம்.. புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஆதி தமிழ் சமூக மக்களுக்கு தேடி தேடி தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தது நாம்! ஆதி தமிழ் குடிகளை 22 பொதுத் தொகுதிகளில் நிறுத்தியது நாம்!
சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க.. திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம்… என் மருமகன் வாங்கி கொடுத்ததுடா..
கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம் யார்..? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..? நீங்கள் தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டு வழிபட்டதெல்லாம் உண்மை என்றால் சொல்லுங்க யார் காரணம் என்று..? பாதிக்கப்படவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்..?
தேர்தலில் ஜாதியை ஒழிச்சுட்டாராம் முதல்வர் விஜய்.. இத்தனை தொகுதி தமிழ்நாட்டில இருக்கும்போது பெரம்பூரில் ஏன் போட்டியிட்டார்? நீங்க சொல்றீங்களா? உங்க கட்சிக்காரன் சொல்வானா? நான் சொல்லுவேன்..இத்தனை தொகுதி இருக்கும்போது திருச்சி கிழக்கைத் தேடிப் போய் ஏன் நின்றீர்கள்?
பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்குல சாதியும் மதமும்.. நீங்கள் என்ன பேசுறீங்க? சாதியை ஒழித்துவிட்டேன் என்கிறீர்கள், உங்களை ஒழிக்காமல் எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்?
நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலில் ஜோசப், இப்ப முதலமைச்சர் ஆயிட்ட பிறகு ஜோசப் விஜய், ஜோசப் விஜய்! ஏன் அந்த முதல் படத்தில் அறிமுகமான போது ஏன் ஜோசப் விஜய் என போடவில்லை?
3 கிலோ மீட்டர் ஓடிய ஒரே முதல்வரா..? 12 கிலோ மீட்டர் நான் ஓடுவேன்.. என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா..? போதைப்பொருளை ஓடி ஒழிக்க கூடாது.. தேடி ஒழிக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. சரி ஓடுனீங்களே அந்த போதை பொருள் எல்லாம் ஒழிந்துவிட்டதா..?
நீங்கள் இந்த தெருவுக்குத் தெரு திறந்திருக்கிற டாஸ்மார்க், அதுல விற்கிற பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஒயின் இதெல்லாம் கரும்புச்சாறா? இல்லை பழச்சாறா?
திராவிட கட்சிகள் அரை நூற்றாண்டுகளாக வெறும் செய்தி அரசியல், விளம்பர அரசியல் தான் செய்தது, சேவை அரசியல் செய்யவில்லை. இடைத்தேர்தல் வரட்டும்.. வெறித்தனமாக காத்திருக்கிறேன்..
இவங்க ஒன்லி ரீல்ஸ்தான், நோ ரூல்ஸ்! ரூல் பண்றது இல்ல, ரீல் தான்!
நல்ல தகப்பன் எவனாவது உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு கிரிக்கெட் பார்க்க போவானா..?”
இவருக்கெல்லாம் (அமைச்சர் சரத்குமார்) அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதால் அவர் என்ன நிர்வாகம் செய்வார்..? மாத்திரையை நசுக்க எதுக்கும் 500 ரூபாய் கையில்..?
நாட்டை கெடுத்து வச்சிருக்கீங்க நீங்க.. நாங்க காப்பாற்ற போராடுறோம்டா! கேள்விதான்டா கேட்கிறோம்! இவ்வாறு சீமான் பேசினார்.
