வைஃபை ஆன் செய்தது, “லட்சியம் எட்டும் வரை எட்டு.. படையெடு” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது..
என்னங்க ப்ரோ.. சூப்பர் சிங்கர் ஷோ பார்த்துட்டு வர்றீங்களா ப்ரோ?
அதுவும் பார்த்துட்டுதான் வர்றேன்.. நடக்கப் போற பொலிட்டிக்கல் ஷோக்களையும் சொல்லத்தான் போறேன்..
ஓஹோ.. ஆரம்பிங்க பாஸ் கச்சேரியை..
சென்னை ஏர்போர்ட்டுக்கு பாஜக கொடி இல்லாத காரில் வந்து இறங்கி டெல்லி போனாரு இல்லையா அண்ணாமலை (Annamalai).. அப்ப, “2 நாட்களில் எல்லாத்தையும் சொல்றேன்”ன்னும் சொல்லிட்டு அண்ணாமலை டெல்லி போனார்..
டெல்லியில என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சப்ப, “முதல்ல பாஜக தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்திச்சாரு.. நிதின் நபின்கிட்ட 6 பக்க லெட்டரை அண்ணாமலை கொடுத்தார்.. அதுல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை குறை சொல்லியும் தமிழக பாஜக சீனியர் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படாம இருக்கிறதை பத்தியும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பத்தியும் 5 பக்கங்களுக்கு புகார் சொல்லி இருந்தார்..
அதோட 11 சதவீதம் ஓட்டு வாங்குன பாஜக தமிழ்நாட்டுல 3 சதவீதம் மட்டுமே ஏன் வாங்கியது?ன்னு அப்படிங்கிறதுக்கான காரணங்கள், வேட்பாளர் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள், தொகுதிகளை அதிமுகவிடம் வாதாடி பெறாததுன்னு பல விவகாரங்களை பட்டியல் போட்டிருந்தார்..
கடைசி 1 பக்கத்துல இத்தனை விஷயங்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்காததால நான் ராஜினாமா செய்யறேன்னு சொல்லி இருந்தார் அண்ணாமலை.
அண்ணாமலையோட குமுறலை மொத்தமா படிச்ச நிதின் நபின் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்துற மாதிரி பேசிப் பார்த்தார்.. ஆனாலும் அண்ணாமலை பாஜகவை விட்டு போறதுல ரொம்பவே உறுதியா இருந்தார். அதனால அமித்ஷாகிட்ட (Amit Shah) விஷயங்களை ஷேர் செஞ்சாரு.. அதோட அண்ணாமலைகிட்ட, “அமித்ஷா ஜியை பார்த்து பேசுங்க.. உங்களை வர சொல்றாரு”ன்னும் சொல்லி அனுப்பினார் நிதின் நிபின்”ன்னு சொல்றாங்க
அமித்ஷாவை அண்ணாமலை சந்திச்சு பேசுனாரா ப்ரோ?
யெஸ்.. டெல்லி பாஜக லீடர்ஸ் கிட்ட கேட்டப்ப, “அமித்ஷாவையும் அண்ணாமலை சந்திச்சு ரொம்ப நேரம் பேசினார்.. அப்ப அமித்ஷா, “அதிமுகவுக்கும் உங்களுக்கும் terms சரியில்லாம இருந்தது.. அப்ப நமக்கும் கூட்டணி தேவையா இருந்துச்சு… அந்த ஒரு காரணத்துலதான் உங்களை தலைவர் பதவியில இருந்து மாத்த வேண்டிய சூழ்நிலை வந்தது.. உங்க ஒர்க்கை நாங்க குறை சொல்லலையே”ன்னு ஆறுதலாவும் பேசிப் பார்த்தாரு.
அண்ணாமலையோ அமித்ஷா பேசியும் இறங்கி வரலை.. நான் பாஜகவை விட்டு போறதுன்னு முடிவாக இருக்கேன்னும் தெளிவாக சொல்லிட்டாரு அண்ணாமலை. ஒரு கட்டத்துல அமித்ஷாவும் வேறவழியே இல்லாம, “நீங்க பிரைம் மினிஸ்டரை பார்த்து பேசிட்டு போங்க”ன்னு சொல்லி அனுப்பி வைச்சார்.. அதோட அண்ணாமலையோட புகார்களை வெச்சு விசாரணை நடத்த நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வர சொன்னார் அமித்ஷா”ன்னு சொல்றாங்க ப்ரோ..
அண்ணாமலையோட பிறந்த நாள் இன்று.. அதனாலதான் அவரோட ஆதரவாளர்கள் தலைவா! வா! தரணி ஆள வா!- தனிக்கட்சியோட பேரு இதுதான்னு எல்லாம் அவங்களாகவே அறிவிக்கிறதும் போஸ்டர் ஒட்டுறதுமா இருக்காங்க..
இப்ப நிமிஷம் வரைக்கும் அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்துட்டாருன்னுதான் சொல்றாங்க.. பாஜக அதை அக்செப்ட் பண்ணிடுச்சான்னு உறுதியாக தெரியலை.. இந்த நிலையில பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திச்சு பேசுனதுக்கு அப்புறம்தான் எல்லாமே கிளியரா வரும்..
அண்ணாமலை கட்சி ஆரம்பிச்சுடுவாராங்க ப்ரோ?
அதை பத்தி அண்ணாமலைக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “முதல்ல கட்சி தொடங்குறது சந்தேகம்.. ஆனா கண்டிப்பா ஒரு இயக்கத்தை தொடங்க இருக்கிறார்.. அந்த இயக்கம் பாஜக சாயலில் இருக்காது.. திமுகவைப் போல தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்துற மாதிரியான நீட் எதிர்ப்பு போன்ற கொள்கைகளை பேசுறதா இருக்கும்.. லைட்டா தேசியம்.. மெஜாரிட்டியாக தமிழ்நாட்டு நலன் அப்படிங்கிறதுதான் அந்த இயக்கத்தோட கொள்கை, கோட்பாடா இருக்கும்..
தன்னோட ஆதரவாளர்களை இயக்கமா ஒருங்கிணைச்சு செயல்பட்ட பிறகுதான் அடுத்த கட்டத்தை நோக்கி போவார்.. நாளைக்கு பிரஸ் மீட்ல எல்லாத்தையும் விலா வாரியா அண்ணாமலை சொல்லிடுவார்”ன்னு சொல்றாங்க..
ஓகே ப்ரோ.. மதிமுக பக்கம் எல்லாருடைய கவனமும் இருக்கே ப்ரோ?
ஆமாம்.. கடந்த 2 வாரங்களாகவே அப்பா வைகோவும் மகன் துரை வைகோவும் குதிரை பேர அரசியலைப் பத்தி பேசுறப்ப 2006-ல் திமுகதான் குதிரை பேர அரசியலையே தொடங்கி வெச்சது மாதிரி விமர்சிக்கிறாங்க..
அதுக்கு திமுக தரப்புல மைல்டா விமர்சனம் வெச்சாலும் ஒரு சிலர் சோசியல் மீடியாவுல காட்டமாக பதில் சொல்லவும் செய்யுறாங்க..
அதே மாதிரி, விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர்ற பத்தியும் திமுகவை சீண்டுற மாதிரியே பேசிகிட்டு இருந்தாங்க வைகோவும் துரை வைகோவும்.. ஒரு கட்டத்துல, “நாங்க தனிச் சின்னத்துல நிக்காம உதயசூரியனில் சின்னத்துல போட்டி போட்டதால்தான் விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர முடியாத துரதிருஷ்டமான நிலைமை வந்துருச்சு”ன்னு துரை வைகோ சொன்னது ரொம்பவே பிரளயமாக வெடிச்சிருச்சு..
திமுகவோட சீனியர் மாஜி மினிஸ்டர் ஒருவர் மதிமுக மா.செ.கிட்ட, “ராத்திரி பகலா உங்களுக்காக எலக்ஷன் வேலை செஞ்சோம்.. இப்ப இப்படி முடிவு எடுக்கலாமா.. எங்க தலைவர் ஸ்டாலின் கூட, துரை வைகோவை திருச்சியில நிறுத்தலாம்னு சொன்னப்ப நாங்க வேணாம்னு சொன்னோம்.. கட்சிக்காரனுக்கு சீட் கொடுக்கலாம்னு சொன்னோம்.. ஆனாலும் இல்லைன்னு துரை வைகோவை நிறுத்துனாங்க.. அப்பவும் கூட அவர் என்ன என்னமோ பேசினாரு.. அதை எல்லாம் மனசுல வெச்சுக்காம வம்பாடு பட்டு உழைச்சு ஜெயிக்க வெச்சோம்.. ஆனா எல்லாமே வீணாப் போற மாதிரி முடிவெடுக்கிறீங்களேப்பா”ன்னு ரொம்ப வேதனைபட்டார்..
இதை பத்தி வைகோவுக்கு நெருக்கமானவங்க கேட்டா, “நாங்க எவ்வளவோ பொறுமையாத்தானே இருந்தோம்.. சிபிஐ, சிபிஎம் எல்லாம் கூடுதல் சீட்டு கேட்டப்பவும் நாங்க பரவாயில்லைன்னு 4 சீட் வாங்கிட்டுதானே போனோம்.. தனிச் சின்னத்துல நிக்கனும்னுதான் நினைச்சோம்.. ஆனாலும் திமுகவோட சின்னத்துல நின்னோம்.. சீர்காழி தொகுதியில மட்டும் தனிச் சின்னத்துல நிக்குறதா அறிவிச்சோம்.. கடைசியில ஸ்டாலின் கேட்டுகிட்டதால அங்கேயும் உதயசூரியன்ல போட்டியிட்டோம்.. 2 இடத்துல ஜெயிச்சோம்எலக்ஷன் முடிஞ்சப்ப கூட, “எங்ககிட்ட ஆதரவு கேட்கனும்னு கூட விஜய் நினைக்கவே மாட்டாரு.. எங்க பக்கம் தலைகூட வெச்சு படுக்கமாட்டாரு”ன்னுதானே வைகோ சொன்னாரு…
எல்லாருமே திமுக கூட்டணியை விட்டு போனப்பவும் வைகோவும் துரை வைகோவும் ஸ்டாலின் கூடத்தானே இருந்தாங்க.. ஆனா இப்ப எல்லாம் ரெண்டு பேருக்குமே மரியாதை கிடைக்கலையே.. ஸ்டாலினை தொடர்பு கொண்டு வைகோ, துரை வைகோ பேச முடியலைன்னு சொல்றாங்க.. உதயநிதியையும் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலைமைதான்.. இவ்வளவு அவமரியாதையை தாங்கிட்டு சகிச்சுகிட்டு ஏன் திமுக கூட்டணியிலேயே இருக்கனும்?னுதான் அப்பாவும் மகனும் நினைக்கிறாங்க.. அதனாலதான் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கிறோம்னும் சொல்லி இருக்காங்க” என்கின்றனர்.
மதிமுக பொதுக்குழு என்னைக்கு எங்கே கூடுது ப்ரோ?
மதிமுக பொதுக்குழு ஜூன் 27-ந் தேதி கூடுது.. பொதுவாக மண்டபங்களில் நடக்குற மதிமுக பொதுக்குழு கூட்டம் இந்த முறை அரசுக்கு சொந்தமான வள்ளுவர் கோட்டத்துல நடக்குதாம்.. இதை பத்தி விசாரிச்சா, “வள்ளுவர் கூட்டத்துல மதிமுக பொதுக்குழுவை நடத்துறதுக்கு அமைச்சர் ராஜ்மோகனை தொடர்பு கொண்டு வைகோதான் பேசுனாரு.. ராஜ்மோகனும் பெர்மிசன் கொடுக்க சொல்லிட்டாரு.. விஜய் அரசு (Vijay) இடத்துல அரசு அனுசரணையோட நடக்குற மதிமுக பொதுக்குழுவுல அரசுக்கு எதிராகவா முடிவெடுக்க போறாங்க? அரசுக்கு ஆதரவான முடிவுதான் எடுப்பாங்க”ன்னு ட்விஸ்ட் வைக்கிறாங்க ப்ரோ..
அங்கிட்டு அண்ணாமலை என்ன முடிவு எடுப்பாருன்னு ஒரு ட்விஸ்ட்.. இங்கிட்டு வைகோ என்ன முடிவு எடுப்பாருன்னு ஒரு ட்விஸ்ட்.. எலக்ஷன் முடிஞ்சும் கூட இந்த ட்விஸ்ட்டுகளுக்கு லீவ் கிடைக்கலைங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
