Video : மனைவி, பேரன், பேத்தியுடன் சபரிமலைக்கு இருமுடி சுமந்து சென்ற அன்புமணி ராமதாஸ் !

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbumani

கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், கடுமையான விரத முறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்வது வழக்கம். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனர்.

அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்காகக் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மாலை அணிந்து தனது விரதத்தைத் தொடங்கினார். சென்னை உத்தண்டியில் உள்ள விநாயகர் கோயிலில் அவர் முறைப்படி மாலை அணிந்து கொண்டார்.

ADVERTISEMENT

அவருடன் அவரது மனைவியும், தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணி மற்றும் அவர்களது பேரன், பேத்தி ஆகியோரும் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் மலை ஏறி சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share