“ஈபிஎஸ் மகனுக்குப் பதவியா?” – அதிமுகவில் அடுத்த சர்ச்சை – ராஜ்சத்யன் பதிவு!

Published On:

| By Kavi

அதிமுகவுக்கு எதிராக ஒரு Narrative Set செய்யப்படுகிறது என ராஜ் சத்யன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார்.

ADVERTISEMENT

அப்போது, எடப்பாடி பழனிசாயின் மகன் மிதுன் பழனிசாமியை  கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் . அவருக்கு இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கே. பி. முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

இதுதொடர்பாக நேற்று விழுப்புரத்தில் பேசிய எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், ‘ தனது மகனை அரசியலுக்குள் கொண்டு வர  எடப்பாடி டிராமா செய்கிறார் என்று விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில்,  அதிமுக  ஐடி விங் துணை தலைவர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசியலில் அல்லாதவர்களை ,  பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து ,  அதிமுகவுக்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது.

அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது .

ADVERTISEMENT

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள்,  

எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்…

இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்’ என்று  பதிவிட்டுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share