பாமக நிர்வாகிகளை நாளை முதல் சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்- கூட்டணி குறித்து ஆலோசனை!

Published On:

| By Minnambalam Desk

Anbumani ramadoss

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தம்மை கடுமையாக விமர்சித்த நிலையில் பாமக மாவட்ட நிர்வாகிகளை நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து சந்திக்கிறார் அக்கட்சியின் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ். Anbumani Ramadoss to Meet PMK Functionaries

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை, குடும்ப விவகாரங்களை வெளிப்படையாக முன்வைத்தார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது, பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி; பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் பாமக இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் திடீரென ராஜினாமா செய்ததுடன், அன்புமணிதான் வழிகாட்டி என அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் பாமகவின் மாவட்ட நிர்வாகிகளை நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் அன்புமணி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னர் பாமகவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share