‘அம்மோனியா’ கசிவு.. பலியான 7 உயிர்கள்- தொழிற்சாலை உரிமையாளர் கைது!

Published On:

| By Mathi

Ammonia leak claims 7 lives; Disaster Response Force deployed to the site

திருவள்ளூர் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் பலியான நிலையில் தனியார் தொழிற்சாலை உரிமையாளர் மோகன், மேலாளர் டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் கடல் உணவுகளைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் St. Peter’s Paul Seafoods Exports தொழிற்சாலையில் இன்று ஜூன் 21-ந் தேதி திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

ADVERTISEMENT

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 9 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மோனியா வாயு கசிவால் பலியானோர் குடும்பங்களுக்கு ஆளுநர் அர்லேகர், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே அம்மோனியா வாயு கசிவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.

இதனிடையே St. Peter’s Paul Seafoods Exports நிறுவன உரிமையாளர் மோகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share