ரஜினி தான் தலைவர்: புகழ்ந்த அமிதாப்

Published On:

| By Monisha

Amitabh Bachchan tweet to Rajinikanth

ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் படம் தலைவர் 170. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து தலைவர் 170 படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தலைவர் 170 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி சுற்று வட்டார பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினி தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் “தலைவர் 170” படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது என பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ADVERTISEMENT

Amitabh Bachchan tweet to Rajinikanth

தற்போது நடிகர் ரஜினியின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் அமிதாப் பச்சன், ”நீங்கள் என் மீது மிகவும் கருணை காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள், தலைவர் 170

ADVERTISEMENT

தலைவர் என்றால் லீடர், ஹெட், சீஃப்..

நீங்கள்தான் தி ஹெட், தி லீடர், தி சீஃப்.. இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா மக்களே..?? உங்களுடன் என்னை என்னால் ஒப்பிட முடியாது.
உங்களுடன் மீண்டும் பணிபுரிவதில் பெருமிதம் கொள்கிறேன்”

என்று நடிகர் ரஜினிகாந்த் மீதான அன்பை தனது எக்ஸ் பக்கத்தின் பதிவு மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

– கார்த்திக் ராஜா

அதிகரிக்கும் தங்கம் கடத்தல்: காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டிஜிட்டல் திண்ணை: ஆளுநரை எதிர்க்கத் தயக்கம்: ஸ்டாலின் ஸ்கெட்ச்சில் சிக்கிய எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share