thalaivar 170 shooting in mumbai

‘தலைவர் 170’: அமிதாப் – ரஜினி காம்போ… ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்!

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170.

தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களும் ரஜினியுடன் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் சிறப்பான பூஜைக்குப் பிறகு தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருப்பதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், ”இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ’தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என தனது சந்தோஷத்தை எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும், ரஜினி பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் இருவர்களின் கெட்டப்பும் செம மாஸாக உள்ளது.

தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

அதிகரிக்கும் டெங்கு… 10,000 சிறப்பு முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ், விஜயின் தாயார்: நடந்தது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *