ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தலைவர் 170.
இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
தலைவர் 170 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைவர் 170 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மும்பையில் தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கும் எனவும் நடிகர் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகளுக்கான ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக படக் குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 25ஆம் தேதி ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தலைவர் 170 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
மழை அப்டேட் ; இன்று எங்கெங்கு மழை?
ராஷ்மிகாவின் புது பட டைட்டில்!
திமுக யாருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது? விஜயபாஸ்கர்