இன்னுமா நமுத்துப் போகாம இருக்கு: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

செங்காந்தள்

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிடம் சரிபாதி இடங்களைக் கேட்க காங்கிரஸ் திட்டம்.
தேர்தல் முடிவு இப்போதே தெரிகிறது.

கோழியின் கிறுக்கல்!!

ADVERTISEMENT

வாழ்க்கைங்கிறது ஆட்டோ பின்னாடி வண்டி ஓட்டுற மாதிரி தான்,
எப்ப, எப்படி திரும்பும்னே கணிக்க முடியாது!!

ArulrajArun

ADVERTISEMENT

முன்னெல்லாம் மாசம் ஒரு நாள் பவர் கட் ஆகும்,
இப்போல்லாம் பவர் கட் ஆகி கட் ஆகியே ஒரு மாசம் முடிஞ்சிடுது …

Dr.Aravind Raja

“திமுக – அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்கப் பார்த்தாங்க”
ஏன்டா இன்னுமா நமுத்துப் போகாம இருக்கு.

Caroline

ஒரு நிமிடம் கூட மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருப்பவன் காதலில் விழுந்தவன்….
நிமிடத்திற்கு ஒரு முறை சுவிட்ச் ஆப் செய்பவன் கடனில் விழுந்தவன்..

ArulrajArun

அப்புறம் என்னப்பா தொட மாட்டோம் , தொட்டவர்களை எங்க கட்சியில சேர்க்காம விட மாட்டோம் ன்னு அறிவிச்சிடலாமா ….

கோவிந்தராஜ்

நைட் பூமி உள்ள வரை அம்மாவின் புகழ் நிலைத்து இருக்கும்னு ஸ்டேடஸ் வச்சு இருந்தான்

காலையில் எழுந்து பார்க்கேன்
உங்கள் விஜய் உங்கள் விஜய்னு ஸ்டேடஸ் வச்சு இருக்கான் விடியதற்க்குள்ள விலை போயி இருக்கான்

படிக்காதவன்

சம்பாதிச்ச காச நாம ஒரு செலவு பண்ண நினைச்சா
நம்ம கைக்கு வரும்போதே அது ஒரு செலவு நினைச்சு வரும்போல…

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share