குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 26) சென்னை வருகிறார்.
பிரதமர் மகாராஷ்டிரா, கோவா பயணம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும், கோவா மாநிலத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கனடா – இந்தியா விசா சேவை!
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் விசா சேவையை இந்தியா தொடங்குகிறது.
ஆம்னி பேருந்துகள் விடுவிப்பு!
அதிக கட்டணம் வசூலித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளில் வரி கட்டிய பேருந்துகள் மட்டும் இன்று விடுவிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஷேர் தொகை விவகாரம் பேச்சுவார்த்தை!
திரையரங்க உரிமையாளர்கள் 60 சதவீதத்திற்கு மேல் ஷேர் தொகை வழங்கப்போவதில்லை என்று திட்டமிட்டிருந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 523வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தேற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’பார்க்கிங்’ முதல் பாடல்!
நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் முதல் பாடலான ’செல்லக் கல்லியே’ இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
‘ரிபெல்’ ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கட்லெட்
மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்காத ஆளுநரு: அப்டேட் குமாரு