2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Amit Shah AIADMK BJP
தினத்தந்திக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது.
எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும்.
தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல் அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
அதிமுகவுக்கு நெருக்கடி?
தமிழ்நாட்டில் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அதிமுகவின் நிலைப்பாடு; மத்திய அமைச்சர் அமித்ஷா, ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேசும் போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பேசுவதும் அதிமுக இதனை மறுப்பதும் தொடருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக பங்கு பெறும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
