அதிமுகவில் இருக்கிறேனா? தவெகவுக்கு போகிறேனா?  சிவி சண்முகம் ஓபன் டாக்!

Published On:

| By Kavi

நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என எடப்பாடி பழனிசாமி தான் சொல்ல வேண்டும் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (ஜூலை 3)  தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனத்தில் உள்ள இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், தனது ஆதரவாளர்களை வரவழைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வருகின்றன. 

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ”ஒருவாரம் கழித்து இங்கு வந்தேன், அதனால்  எல்லோரும் வந்தார்கள், ஆலோசனை மேற்கொண்டேன்” என்றார். 

ADVERTISEMENT

நீங்கள் தவெகவில் இணைவதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு,  ”அதெல்லாம் இல்லை… வேறு என்ன?” என்று  கேள்வி எழுப்பிய அவர், 

நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. அதை எடப்பாடி பழனிசாமிகிட்டதான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டுபுறப்பட்டார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share