திமுக தலைவர் கருணாநிதியின் கடைசி மகன் முக தமிழரசனின் 60 வது திருமண விழா தி.நகரில் ரெசிடென்சியல் ஹோட்டலில் நடந்தது. உறவுகள் அனைவரும் வந்து வாழ்த்தினர். கனிமொழியும் நேரில் வந்து வாழ்த்தினார். முக ஸ்டாலின் குடும்பத்தோடு விழாவில் கலந்துகொண்டார். கருணாநிதியும் நேரில் சென்று வாழ்த்தினார்.
இந்நிலையில் முக அழகிரி வருகிறார் என்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் கிளம்பியபின் முக அழகிரி விழாவிற்கு வந்து பங்கேற்றார். ‘ ஏன் அவர்களை நேரில் சந்தித்து சங்கடத்தை ஏற்படுத்தணும் அதனால் அவர்கள் இருக்கும்வரை தனியாக ஒரு அறையில் தங்கிவிட்டு போனபின் விழாவுக்கு வந்தேன்’ என்றாராம்.