ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தில் என்னவெல்லாம் இருக்கலாம்…? ஒன்லைன், பாசிட்டிவ், நெகடிவ். ஆனால் ஒரு படத்தில் இதற்கான எந்த இடமும் இல்லாது, அஜித் என்கிற ஒருவரைக் கொண்டாட மட்டுமே ஒரு முழு நேர திரைப்படம் உண்டு என்றால் அது தான் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் தொடக்கத்தில் ‘ நாம யாரப் பார்க்க வந்துருக்கோம்? ‘ என ஒரு அசரீரி திரையில் கேட்க அனைவரும் அஜித் என்று கத்தினர். அப்படி கத்திய கும்பலில் நீங்கள் இல்லை என்றால் எஞ்சியுள்ள இரண்டரை மணி நேரப் படம் உங்களுக்கானது அல்ல. அவ்வளவு தான் சிம்பிள். ajith kumar good bad ugly movie review 2025
சரி, படத்தில் உப்புக்கு சப்பாணியாக கூட ஒரு ஒன்லைன் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். ஆம், அஜித் ஒரு கேங்ஸ்டர். தன் குடும்பத்திற்காக நல்லவனாக மாறி, ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் திரும்பி வரும் போது அவர் குடும்பத்திற்காகவே மீண்டும் கேங்ஸ்டராக நேரிட்டால் என்ன ஆகும் என்பதே ‘குட் பேட் அக்லி’

திகட்ட திகட்ட அஜித் கொண்டாட்டம்! ajith kumar good bad ugly movie review 2025
இந்தக் கதையை ஒரு தரமான கமர்சியல் ஆக்ஷன் படமாக எடுத்திருக்கலாம். ஆனால், ஆதிக்கின் நோக்கம் கதையோ, திரைக்கதையோ அல்ல. அஜித்தை எந்தெந்த வகையில் கொண்டாட வேண்டுமோ அந்தந்த வகையில் கொண்டாட வேண்டும். அவ்வளவு தான். அதை திகட்ட திகட்ட செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
படத்தில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை அஜித் ரிபெரென்ஸ் மட்டும் அல்ல, பிரசன்னா, திரிஷா, பிரபு, படத்தின் செட் அசிஸ்டென்ட், புரொடக்ஷன் பாய் என அனைவரின் ரிபெரென்சையும் விட்டு வைக்கவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரனின் திரை உலகம் மிகப் புதுமையாக மிகையான கதாபாத்திரங்களை கொண்டு இருக்கும். ஆனால், அதற்கான திரைக்கதை , காட்சியமைப்பு என ஒரு சேரும் போது தான் அது முழுமையடைகிறது. மருந்துக்கு கூட எழுத்து என்கிற ஒன்றே இல்லாத ஒரு திரைப்படத்தை எப்படி முழுமையான ஒரு திரைப்படம் என்று சொல்ல முடியும்?

பழைய பாடல்கள் மத்தியில் ஜீவிபிரகாஷ் இசை! ajith kumar good bad ugly movie review 2025
அபிநந்தனின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இரண்டு சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்தது. படத்தின் பின்னணியில் ஒலிக்கும் 40க்கும் மேற்பட்ட பழைய பாடல்கள் மத்தியில் ஜீவிபிரகாஷின் இசை ஒரே மாதிரியாகவே தெரிந்தது. சொல்லப்போனால் கொஞ்சம் இரைச்சலாகவே இருந்தது. பழைய அஜித்தை காண்பிக்கும் சில சிஜி காட்சிகள் மிக கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. ஆதிக் டிரேட் மார்க்கை எடிட்டர் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் ஒரு சில காட்சிகளில் பார்க்க முடிந்தது. பாடலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சண்டை காட்சிகள் தியேட்டரில் தெறித்தன.
குறிப்பாக மலேசியாவின் டார்கீஸ் எனும் புகழ்பெற்ற குழுவின் ‘புலி புலி’ பாடல் இடம்பெறும் இடம் ரசிக்கும் படி இருந்தது. அஜித்தின் நடிப்பு பல இடங்களில் உற்சாகமாக இருந்தாலும், சில இடங்களில் ‘அம்மா சாப்டு ஆறு நாள் ஆச்சு’ மோடிலேயே நடித்துள்ளார். மொத்தத்தில் இந்தத் திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ‘குட்’, மற்றவர்களுக்கு ‘பேட்’, சினிமா ரசிகர்களுக்கு ‘கொஞ்சம் அக்லி’. ajith kumar good bad ugly movie review 2025
– ஷா