GBU : 23 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்திற்கு ஆங்கில டைட்டில்… யார் காரணம்? சீக்ரெட்டை உடைத்த ஆதிக்

Published On:

| By christopher

English title for Ajith's film after 23 years : adhik leaves the secret

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். English title for Ajith’s film after 23 years : adhik leaves the secret

அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல திரையரங்குகளில் படத்தின் முதல்நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

இந்த நிலையில் கலாட்டா யூடியூப் சேனலுக்காக ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் படத்தின் டைட்டில் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “அஜித் சார் படத்தின் டைட்டில் பல ஆண்டுகளாக பரமசிவன், திருப்பதி, அசல், கிரீடம், வரலாறு, வீரம், விவேகம், வலிமை, விடா முயற்சி, துணிவு, நேர்கொண்ட பார்வை, என தூய தமிழில் இருக்கும்.

ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகும் நான் டைட்டிலை யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருநாள் ’படத்திற்கு என்ன டைட்டில்?’ என்று அஜித் கேட்டார். அவரிடம், ’படத்தில் 3 எபிசோட் இருக்கிறது. அதற்கேற்றவாறு யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

உடனே ஆன் ஸ்பாட்டில் ’குட் பேட் அக்லி’ என்றார். அதை கேட்டதும், ’சார் பயங்கரமா இருக்கு’ என்றேன். அதனையே தயாரிப்பு நிறுவனம், உதவி இயக்குனர் என அனைவரும் கூறினர். இதை விட படத்துக்கு அருமையான டைட்டில் அமையாது” என்று ஆதிக் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2002ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன அஜித் படத்திற்கு ’ரெட்’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தூய தமிழ் வார்த்தைகளே அவரது படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ’குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share