-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பதற்றமும் பரபரப்பும் வேண்டாம். நிதானமே நிலையான உயர்வு தரும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். பிறர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்.
பொறுப்புடன் செயல்பட்டால், எதிர்பார்க்கும் இடமாற்றம், உயர்வுகள் கைகூடிவரும். உடனிருக்கும் யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியங்களில் வீண் குழப்பம் தவிருங்கள். மூன்றாம் நபர் தலையீட்டைக் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். இளம் வயதினர் பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிசார்ந்த விவரங்களை உங்கள் நிழலிடமும் பகிர வேண்டாம்.
அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது.
வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம். தலை,முதுகு,அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு வாழ்வை சீராக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)