Aippasi miruga sirisam Natchathira Palan

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சோம்பல் தவிர்த்தால் சுபிட்சங்கள் அதிகரிக்கும் காலகட்டம். எந்த சமயத்திலும் கவனச்சிதறல் கூடாது. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

இடமாற்றம், பதவியைப்பெற நேரடி முயற்சிகளே நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே.

வீண் ரோஷம் தவிர்த்தால், வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள். அரசுத்துறையினர்க்கு பொறுப்புகள் அதிகரிக்கும். படைப்புத் துறையினர் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். வாய்ப்புகளை முழு கவனத்துடன் செய்யுங்கள்..

மாணவர்களுக்கு நட்புகளால் பிரச்னை வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம். தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகள் வரலாம். நவகிரஹ குரு வழிபாடு நன்மை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts