தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
டாஸ்மாக் மதுபான வகைகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனையில், என்ரிக்கா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மதுபான வகைகளில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் எழுதிய கடிதத்தில், 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ள அதிமுக, “கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்?” என கேள்வி எழுப்பி உள்ளது
