சென்னையில் முதல்வர் விஜய் முதல் முறையாக கொடி ஏற்றிய சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 80ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி கொடி ஏற்றுவதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய் மெரினா கடற்கரை உழைப்பாளர்கள் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டையை நோக்கி வந்தார்.
தொடர்ந்து கோட்டையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து காலை 8.45 மணி அளவில் கோட்டையில் கொடியேற்றினார்.
தனது மகன் முதல் முதலாக கொடியேற்றுவதை காண அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் வருகை தந்தனர்.
இந்த விழாவில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டார். விஜயின் பெற்றோர் இருக்கைக்கு அருகே திரிஷாவுக்கும் அவரது தாயார் உமா கிருஷ்ணனுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது.

விழாவிற்கு வந்த இருவரும் முதல்வர் விஜயின் தாய் தந்தையிடம் நலம் விசாரித்துவிட்டு தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.
தொடர்ந்து விஜய் அணிவகுப்பின்போது சல்யூட் அடிக்க அவரைப் பார்த்து நடிகை திரிஷாவும் சல்யூட் அடித்தார்.
நிகழ்ச்சி முடிந்து விஜய் கிளம்பும்போது அவரது பெற்றோர் மற்றும் திரிஷா ஆகியோர் கையசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் திரிஷா சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
