நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) , தேசியக் கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக் கொடி ஏற்றினார்.

இதேபோல சென்னையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சென்னை கோட்டை கொத்தளம் பகுதியில் காவல்துறையின் அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றார்.
இதன் பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார். முதல்வர் விஜய், முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
