VIDEO: மாநில உரிமைகளுக்கு எதிரான மத்திய அரசு முடிவுகளை எதிர்ப்போம்- அரசுக்கு எதிரான சதிகளை முறியடிப்போம்- முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

CM Vijay Warns Union Govt on State Rights

மாநில உரிமைகளுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரான முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது: தங்களுடைய உயிரை, உடமையை, வாழ்க்கையை எல்லாம் இழந்துவிட்டு, நமக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்த நம்ம சுதந்திரப் போராடத் தியாகிகள், அதுல பிரபலமானவர்கள் மற்றும் பெயர் தெரியாதவங்க அப்படின்னு இருந்தாலும், அவங்க எல்லாருக்கும், ஏன் அவங்க ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட முறையில என்னுடைய வீர வணக்கங்கள்.

ADVERTISEMENT

நம்மை ஒரு அடிமை மாதிரி வச்சிருக்காங்க அப்படின்னு தெரிஞ்சிட்டாலே, மக்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக்கா ஒரு ஒற்றுமை ஒன்னு வர ஆரம்பிக்கும். எல்லாரும் ஒரே மாதிரி யோசிச்சு ஒண்ணு சேர ஆரம்பிப்பாங்க. அப்படி ஒண்ணு சேர்ற இடத்துல தான் சாதி, மதம், மொழி, இனம் இந்த மாதிரி எல்லாமே உடைஞ்சு நொறுங்கும்.

அப்படி உடைஞ்சு நொறுங்குற இடத்துல தான் கிடைக்கிறது தான் உண்மையான சுதந்திரம். அதுதான் நம்ம மகாத்மா காந்திஜி அவர்கள், அவங்களுடைய தலைமையில 1947 ல இதே இந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமக்கு அந்த சுதந்திரம் கிடைச்சது.

ADVERTISEMENT

இன்னைக்கு நாம் எல்லாரும் அந்த சுதந்திரத்தை கெட்டியா புடிச்சுகிட்டு, படிப்படியா டெவலப் ஆகி வந்துகிட்டே இருக்கிறோம். அந்த டெவலப்மென்ட்ஸை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியது நாம் எல்லோருடைய ஒரு கடமையும் கூட.

இந்த நேரத்துல நம்ம தமிழ்நாட்டில், நம்ம தமிழ்நாட்டை லஞ்சத்துல இருந்து, ஊழலில் இருந்து காப்பாத்துறதும் ஒரு மிகப்பெரிய ஒரு விடுதலைக்கு சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கி தான் நம்ம அரசும் செயல்பட்டுகிட்டு வந்துட்டு இருக்கு.

ADVERTISEMENT

இந்த 386 ஆண்டு பழமையான இந்த கோட்டையில, இங்க மேல ஏறி வந்து, இந்த 80-வது சுதந்திர தின நாள்ல, நம்ம நாட்டோட தேசியக் கொடியை ஏத்தி வச்சு, இன்னைக்கு இந்த விழாவில் என்னை பேசவும் வச்சிருக்கீங்க, அதுக்காக உலகம் முழுவதும் இருக்கிற என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்சி இளம் படை தோழர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அப்படின்ற ஒரு மிகப்பெரிய ஒரு கோட்பாட்டை அடிப்படையில வச்சுதான் நம்ம தமிழ்நாட்டை லஞ்ச லாவண்யமற்ற, போதைப்பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில,

ஒரு வெளிப்படையான, ஒரு உண்மையான, ஒரு நேர்மையான ஒரு நிர்வாகமா நாம செயல்பட்டுகிட்டு வந்துகிட்டு இருக்கிறோம். பொதுவாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது.

மக்கள் நலன் தான் மிக மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த அடிப்படையிலதான் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டுகிட்டு வந்துகிட்டு இருக்கோம். அதே அடிப்படையிலதான் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலேயும், நம்ம சென்ட்ரல் கவர்மெண்ட்டுடன் நிர்வாக ரீதியா ஒத்துழைப்போட இருக்கிறோம்.

But at the same time, நம்ம தமிழ்நாடு கொள்கைகள்னு வந்துட்டா, மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகளிலேயும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கை முடிவுகளிலேயும் சரி, நம்ம டிவிகே அரசு எப்பவுமே எதிர்க்கும். அதுல எந்த மாற்றுக்கருத்துமே கிடையாது.

அதே மாதிரி இதுக்கு முன்னாடி நிறைய திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க, அதுல எதெல்லாம் வந்து மக்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கிற மாதிரி திட்டங்கள் இருக்கோ அதெல்லாம் கண்டினியூ பண்ணிக்கிட்டுதான் இருக்கிறோம்.

For example, ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டம். அதை இன்னும் மெருகேத்தி கண்டினியூ பண்ணிக்கிட்டுதான் இருக்கிறோம். அது மாதிரி காலை உணவு திட்டம், அதையும் இன்னும் விரிவுபடுத்தி, சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்ல இருந்து எய்த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் அதையும் விரிவுபடுத்தி, வர செப்டம்பர் 17-ஆம் தேதி பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் அன்னைக்கு அதை தொடங்க இருக்கிறோம்.

சோ, நம்முடைய அரசு, உங்களுடைய அரசு வந்து இந்த மூணு மாசம் ஆகுது. இந்த மூணு மாசம், இந்த மூணு மாசத்துல விவசாயிகளின் பயிர்க்கடன் ரூபாய் 5,093.23 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாள் தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் ரூபாய் 755.83 கோடியில் தொடங்கப்பட உள்ளது.

மக்களின் போக்குவரத்திற்கு ரூபாய் 127.21 கோடியில் 300 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தை குறைத்திடும் வகையில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

வெளிப்படையான நிர்வாகத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. முன் எப்போதும் இல்லாத ஆளில்லா பத்திரப்பதிவு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் கணக்கிடப்பட்டு அனைவருக்கும் தெரியுமாறு ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. வருவாய் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 தினங்களுக்குள் வழங்கப்படுகிறது.

லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்த உள்ளது, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்ட ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் 29, 30-ஆம் தேதியில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாநாட்டுல சட்ட ஒழுங்கு பிரச்சனையில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டிருக்கிறோம்.

அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் மக்களுக்கான சேவை மையங்களாக மாறணும்னு வலியுறுத்தி இருக்கிறோம். அதுமட்டுமில்லாம, கவர்மெண்ட் ஆபீஸ்க்கு வர்ற மக்களுக்கு அவங்க குறைகளை தீர்க்கிறதுக்கும், தேவையான தகவல்களை பெறுவதற்கும், நலத்திட்ட உதவிகள் பெற கவர்மெண்ட் ஆபீஸ தேடி வர்றப்போ, அவர்கள் மிகவும் கண்ணியமாக நடத்தப்படணும்.

மக்களை கனிவா, அன்பா நடத்தணும்னு சொல்லி இருக்கிறோம். மக்களை அலைய விடக்கூடாது, கோரிக்கைகளை நல்லபடியா ஆராய்ந்து, சரியான வழியில தீர்வை தர சொல்லி இருக்கிறோம்.

சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை தியாகம் செஞ்சு கிடைச்ச சுதந்திரம் மிக சிலருக்கான சுதந்திரமா மட்டும் இல்லாம, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுயமரியாதை, சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்கும் உண்மையான மக்கள் சுதந்திரமா இருக்கணும்ங்கிறது எல்லாரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பா இருக்கு.

அதை நிறைவேற்ற பொறுப்பும் நம்மளுடையதுதான். தமிழ்நாட்டு மக்களோட இணைந்து, தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகவும், உலக அளவில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாய் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2036 ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்திப்பிட நாம உறுதி ஏற்போம்.

மக்களே, நம்ம கடமை எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லி யாரும் ஒதுங்கி போயிடாதீங்க. இனிமேதான் நீங்க நம்மளோடவே கூடவே இருக்கணும். உறுதியா நம்ம அரசோடு கூட இருக்கணும். அப்பதான் உங்களுக்காக இருக்கிற எல்லா நல்ல திட்டங்களையும் என்னால செயல்படுத்த முடியும்.

எட்டு கோடி பேரோட அந்த பிரதிநிதிதான் முதலமைச்சர் பதவி என்று சொல்லுவாங்க, அதனாலதான் சொல்றேன், மக்கள்தான் ஆட்சியாளர்கள். நானு, எல்லாருமே அங்க இருக்கிறவங்க எல்லாருமே மக்களோட செர்வன்ட்ஸ்.

அப்படிதான் நான் அதை பார்க்கிறேன். சோ வாங்க, எல்லாருமா சேர்ந்து நம்ம கடமையை சேர்ந்து செய்வோம்.

நம்ம அரசுக்கு எதிரான சக்திகளையும் சரி, சதிகளையும் சரி முறியடிப்போம். நீங்க எல்லாரும் நம்மளோட இருக்கும்போது எனக்கு வேற என்னங்க கவலை. நல்லதை மட்டுமே நோக்கி நகர்வோம்.

அப்படி நல்லதை மட்டுமே நோக்கி நகர உங்க அரசு உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், உங்களுடைய கருத்துக்களையும் மனசுல வச்சுக்கிட்டுதான் நல்ல சில புதிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கிறோம், அதுல ஒரு சிலதை மட்டும் இங்க நான் வந்து படிக்கிறேன்.

ஒன்னு, தாய்நாட்டிற்காக தன்னலமற்ற தியாகம் செய்து நமது நாட்டின் பாதுகாப்பிற்காக அரும்பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இரண்டு, மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவி ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து ரூபாய் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மூன்று, மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 23 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

நான்கு, மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஐந்து, வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய் ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள், மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவற்றிற்கான அரசாணைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

I once again extend my respectful greetings and salute the people of Tamil Nadu who has broken the caste and religious considerations, rejecting money and muscle power, and gave us an overwhelming support to establish people-centric and social justice government.

We are on a mission mode to achieve corruption-free government. We want our people to develop zero tolerance, zero tolerance towards corruption.

And we appeal to the officials and the people of Tamil Nadu to make our state corruption-free.

இன்னைக்கு இந்த விழாவில பரிசு வாங்கப் போற, பாராட்டுக்களை வாங்கப் போற, விருதுகளை வாங்கப் போற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிச்சுகிறேன்.

இந்த விழாவை ரொம்ப அழகா ஏற்பாடு செஞ்ச பொதுத்துறை செயலாளர் அவர்களோட சேர்ந்து அலுவலர்களுக்கும், காலையிலேயே இந்த பிராக்டிஸ் பண்ணி சிறப்பான பரேட் நடத்திய காவல்துறையினர் நண்பர்களுக்கும், இந்த விழாவை வந்து பாதுகாப்பா நடத்துற காவல்துறையினர் அதிகாரிகளுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், சமூக ஊடகத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.
கான்ஃபிடென்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

VIDEO:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share