சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த கலைஞர்- கனிமொழி பெருமிதம்

Published On:

| By Mathi

Kanimozhi Hails Kalaignar for Securing CM's Right to Hoist National Flag on Independence Day

சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி.யின் எக்ஸ் பதிவு: எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.

ADVERTISEMENT

அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.

தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்! இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share