முதல் முறை எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் ‘மாஸ்’ அறிவிப்பு?

Published On:

| By Mathi

Vijay Set to Make a 'Mass' Announcement for First-Time MLAs?

தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகளை முதல்வர் விஜய் விரைவில் அறிக்க இருக்கிறார்.

தமிழக சட்டசபையில் பேசிய விசிகவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிமணி, ”சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. ஏற்கனவே, கடிதமாகவும் கொடுத்திருக்கேன். 280 கி.மீ. தொலைவில் இருந்து நான் இங்கே வருகிறேன். சட்டமன்றத்திற்கு பேருந்து, ரயிலில் வருவதற்கு பயண படிகள் தரப்படுகின்றன. ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் கிடையாது. வாடகை வாகனத்தில்தான் வருகிறேன்.

ADVERTISEMENT

40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தொகுதி மக்களை நேரில் போய் சந்தித்து மக்களுக்குப் பணி செய்யவும் வாகன வசதி இல்லை. அத்துடன் உதவிக்காக ஒரு செயலாளரைச் கையில வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊதியம் கொடுக்கிற வசதியும் இல்லை. இதுதான் சட்டமன்ற உறுப்பினர்களில் பலரது நிலைமை. காலனி அணியாத எம்.எல்.ஏ கூட இருக்காங்க இங்க. ஆகையால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்கின்ற வகையிலே, வாகன வசதி செய்து தர வேண்டும்.

லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய நம்முடைய எம்.எல்.ஏ.க்களை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

ADVERTISEMENT

விரைவில் முதல்வர் விஜய் அறிவிப்பு?

இந்த கோரிக்கையை சட்டசபையிலேயே முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதனடிப்படையில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு அரசு செலவின் கார் மற்றும் தனி உதவியாளர் வழங்கும் அறிவிப்பை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share