தந்தை கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் ”தகைசால் தமிழர்” விருதை முதல்வர் விஜய் (CM Vijay) இன்று வழங்கிய போது கிருஷ்ணசாமியின் மகளும் தருமபுரி எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணி (Soumya Anbumani) எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய தவெக அரசில், இந்த விருது மூத்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கிருஷ்ணசாமிக்கு “தகைசால் தமிழர்” விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாராட்டு பத்திரமும் ரூ.10 லட்சம் காசோலையும் விருதாக வழங்கப்பட்டது.
அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமியின் மகளான சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ., எழுந்து நின்று கைதட்டி ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை சவுமியா அன்புமணி தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
