“குதிரை பேரம்… தவெக அரசு மீது நடவடிக்கை” – ஆளுநரிடம் அதிமுக மனு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை அதிமுகவினர் சந்தித்து பேசியுள்ளனர். 

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 

ADVERTISEMENT

பின்னர் இவர்களில் நான்கு பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். 

19 பேர் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் நடத்துவதாக அதிமுக குற்றம் சாட்டியது.

இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏ அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனபால் எம் பி ஆகியோர் இன்று ( மே 30) மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து பேசினர். 

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் அக்னி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘ குதிரை பேரம் மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசிக் கொண்டிருக்கின்ற தமிழக வெற்றிக் கழக அரசின் மீது நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவை ஆளுநரிடம் கொடுத்தோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167ன் கீழ், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். இதுவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share