2024 ஆம் ஆண்டு மட்டும் அதானி குழுமம் ரூ.56,104 கோடியை வரியாக இந்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.
இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.46,610 கோடியை அதானி குழுமம் வரியாக செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 25 சதவிகிதம் இது அதிகம் ஆகும். Adani Enterprises Limited, Adani Ports and Special Economic Zone Limited, Adani Green Energy Limited, Adani Energy Solutions Limited, Adani Power Limited, Adani Total Gas Limited, and Ambuja Cements Limited, NDTV, ACC and Sanghi Industries போன்ற நிறுவனங்கள் இவ்வளவு வரியை செலுத்தியிருக்கின்றன..Adani Group paid Rs 58,104.4 Cr tax
இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது,
‘வெளிப்படைத்தன்மைதான் நம்பிக்கைக்கு அடிப்படை. நம்பிக்கைதான் உறுதியான வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும். இந்திய கருவூலத்துக்கு பெரிய பங்காளிப்பாளராக நாங்கள் இருக்கிறோம். இது ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புணர்வோடு செயல்படுவதை எடுத்து காட்டுகிறது. நமது நாட்டின் பட்ஜெட்டுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு பங்களிப்பும் ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத்தன்மை நிறைந்தது. அரசு நல்லாட்சி வழங்க நாங்கள் அதன் பின்னால் உறுதியுடன் நிற்கிறோம். Adani Group paid Rs 58,104.4 Cr tax
இந்த தன்னார்வ முன்முயற்சியின் மூலம், வெளிப்படைத்தன்மையால் பங்குதாரர்களின் நம்பிக்கையை பெறுகிறோம். அதோடு, அதிக பொறுப்பு வாய்ந்த உலகளாவிய வரிச்சூழலுக்கு பங்களிப்பதற்கான உறுதியை கொண்டுள்ளோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.