நீட்: நடிகை ஜோதிகா ஆவேசம்!

Published On:

| By Mathi

Actress Jyotika Reacts Fiercely to NEET Issue

நீட் (Neet) தேர்வு மோசடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகை ஜோதிகா வலியுறுத்தி உள்ளார்.

தமது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான்!
ராஜினாமா செய்யுங்கள்!
நான் மாணவர்களுடன்
நமது நாட்டின் எதிர்காலத்துடன் நிற்கிறேன்!
நான் பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக நிற்கிறேன்!
நான் ஜனநாயக இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கிறேன்!
நான் கல்வி சீர்திருத்தத்துக்கு ஆதரவாக நிற்கிறேன்!
​சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சவுரவ்தாஸ்
தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்!
​எந்தவொரு தயக்கமுமின்றி வெளிப்படையாக இருக்கும் Gen Z இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்!
ஒற்றுமையை நிரூபித்துள்ளீர்கள்!
“நாம் தான் இந்தியா”
​அழுத்தங்களை தகர்த்தமைக்கு நன்றி!
எங்களை அச்சமற்றவர்களாக்கியதற்கு நன்றி!
நன்றி CJP
ஜெய்ஹிந்த்

இவ்வாறு நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

”கீதா ராணி” டீச்சர் போல..

2019-ம் ஆண்டு நடிகை ஜோதிகா, கவுதம் ராஜ் இயக்கத்தில் ராட்சசி திரைப்படத்தில் ”கீதா ராணி” என்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீர்குலைந்த அரசுப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக்கும் கண்டிப்பான அரசு பள்ளி தலைமை ஆசிரியராக “கீதா ராணி” அப்படத்தில் குமுறலான வசனங்களைப் பேசும் காட்சிகள் பாராட்டுகளைப் பெற்றன. இப்போது நீட் தேர்வு விவகாரத்தில் நடிகை ஜோதிகா குமுறி இருப்பதும் அதே கீதா ராணி டீச்சர் கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share