தமிழக முதல்வர் விஜய்யின் (Vijay) மகன், ”சிக்மா” திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகும் ஜேசன் விஜய்யின் (Jason Sanjay) 29-வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிகின்றன.

கனடாவில் திரைப்பட கல்வி கற்ற ஜேசன் விஜய், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை லைக்கா, ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த திரைப்படம் ஜூலை 31-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய்யின் தந்தை முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ந் தேதி வெளியான நிலையில் ’சிக்மா’ வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

இதனிடையே ஜேசன் சஞ்சய்யின் 29-வது நாள் இன்று. அவரது சோசியல் மீடியா பக்கங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ‘தன்னம்பிக்கையை மட்டுமே நம்பும் தம்பி சஞ்சய்க்கு வாழ்த்துகள்’ என்பது போல ஏராளமான வாழ்த்துகள் அவரது சோசியல் மீடியா பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
