மம்மூட்டியின் தாயார் காலமானார்!

Published On:

| By Monisha

mammooty mother fathima ismail

மலையாள நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. இவரது தாயார் பாத்திமா இஸ்மாயில் (93). இவர் மூத்த மகன் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் இன்று (ஏப்ரல் 21) அதிகாலை மருத்துவமனையில் பாத்திமா இஸ்மாயில் காலமானார்.

மம்மூட்டியின் தாயார் மறைவிற்கு ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாத்திமா இஸ்மாயிலின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணியளவில் கோட்டயத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளது.

மோனிஷா

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share