விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விசிகவை சேர்ந்த வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் சேர்ந்த கட்சியை ஷாஜஹான் ஆகியோர் இன்று (மே 22) அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், அவர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இதனை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விமர்சிக்கும் தொனியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் வளைந்து எதிர் வீட்டுக்குத் தண்ணீர் கொடுத்தால், இலக்கியத்தில் அதற்கு ‘முட்டாள்தெங்கு’ என்று பெயர் வைப்பார்கள்! அரசியலில் அதற்கு என்ன பெயர் வைப்பது? தமிழ் வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற நிலையில் தவெக அமைச்சரவையில் விசிக இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஆ.ராசா இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
