ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

Published On:

| By Kalai

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.

இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்படி, “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் நிலவுகிறது.

ADVERTISEMENT

இது அடுத்த 24மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதனால் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

21, 22. 23 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 

மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று” அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கலை.ரா

கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம்: கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?

ரூ.41 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share