உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து 24 வயது பெண் மருத்துவர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி!

Published On:

| By Manjula

female doctor dies of heart attack

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயது பெண் மருத்துவர் மரணமடைந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. female doctor dies of heart attack

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி பகுதியை சேர்ந்தவர் பிரவீன். கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் அங்கிதா (24) மருத்துவரான இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

தன்னுடைய உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவரான அங்கிதா தினசரி காலை, மாலைகளில் அதே பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று முன்தினம் (நவம்பர் 22) இரவு 7.30 மணியளவில் அங்கிதா தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழ, அருகில் இருந்த ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் அங்கிதாவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடற்பயிற்சி கூடத்தில் சிசிடிவி காட்சிகள் பெற்று அங்கிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவர் அங்கிதாவின் இந்த திடீர் மரணம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் இந்தியா முழுவதும் இளம் வயதினர் இதுபோல திடீர், திடீரென மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்துள்ளது.

அதே நேரம் இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) இதுபோல திடீர் மரணங்களுக்கு கொரோனா ஊசி காரணமல்ல என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் மது அதிகமாக அருந்துவது, புகை பிடித்தல், தீவிர உடற்பயிற்சி, போதை பொருட்கள், குடும்பத்தில் சிறுவயதில் உயிரிழக்கும் மரபணு ஆகியவை தான் இதுபோன்ற இளவயது மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்று ICMR தெரிவித்துள்ளது.

குறிப்பாக மரணம் அடைவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன் தீவிர உடற்பயிற்சி செய்தல், மது அருந்துதல் போன்றவையும் இந்த திடீர் மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டி உள்ளது.

2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த சுமார் 729 பேரின் மரணங்களை ஆய்வு செய்து, இந்த அறிக்கையை ICMR வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. female doctor dies of heart attack

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

கொம்பன் என்னும் பெண் வம்பன்… என்கவுன்ட்டர் பின்னணி இதுதான்!

விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்: சென்னை வந்த அஜித்

இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தம்… இன்று முதல் அமலுக்கு வந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share